Welcome Guest!    Sign in | Register

News - P.f எஸ்.எம்.எஸ். சேவை அ‌றிமுக‌ம்

P.F எஸ்.எம்.எஸ். சேவை அ‌றிமுக‌ம்
 
ஊழியர் வருங்கால வைப்பு நிதி (Provident Fund - PF) நிறுவனம் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் பெறும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் உறுப்பினர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறும் வகையில் எஸ்.எம்.எஸ். சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களின் ஓய்வூதிய கணக்கு முடிவு, கோரிக்கைகள் தொடர்பான தகவல்கள் எஸ.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். நிறுவனங்கள் செலுத்திய தொகை, திரும்பப் பெறும் பணம், கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை ஆகிய தகவல்களும் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்படும். இந்த வசதியைப் பெற விரும்பும் உறுப்பினர்கள் பண கோரிக்கை மனுவில் தங்களது செல்போன் எண்ணை தவறாமல் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். நிறுவனங்கள் தங்களது செல்போன் எண் மற்றும் ஊழியர்கள் அனைவரின் செல்போன் எண்களை முறைப்படி பூர்த்தி செய்து உரிய அதிகாரியின் கையொப்பத்துடன் வருங்கால வைப்பு நிதியின் மண்டல அலுவலகம் அல்லது சார்பு மண்டல அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். இது தொடர்பாக மேலும் விவரங்களை www.epfindia.nic.in, www.epfochennai.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
 
For more info : vsudhir27@hotmail.com
 
Report Abuse

AreaPartner