News - கனவு காணுங்கள்! நனவாக்க முயலுங்கள்
தோல்வியை விரும்புவர்கள் யாராவது இருக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. எல்லோருமே வெற்றியைத் தான் விரும்புவார்கள். வெற்றி அடைய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால் போதாது; வெற்றிக்கான வழிகளைக் கண்டறிந்து அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
வெற்றிக்கான வழிகாட்டிகள் சில இதோ-
கனவு காணுங்கள்- வெறும் கனவு கண்டால் மட்டும் போதுமா?- அதை நனவாக்க அர்ப்பணிப்பு உணர்வுடன் கடினமாக உழைத்திடுங்கள்- ஆம் இஷ்டப்பட்டு கஷ்டப்படுங்கள்.
கற்றது கையளவு, கல்லாதது கடலளவு- எனவே நாள்தோறும் புதிய புதிய விஷயங்களை கற்றுக்கொண்டே இருங்கள். கற்கும் தாகம் இருக்கும் வரை உங்கள் அறிவு வளர்ந்து கொண்டே இருக்கும். கற்பதென்பது மரணத்தோடுதான் முடிய வேண்டும்.
தெரியாத விஷயத்தை கேட்டுத் தெரிந்து கொள்ள தயங்க வேண்டாம். இங்கு எல்லாம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. கேட்டுத் தெரிந்து கொள்ள தயங்காதீர்கள்.
வெற்றியைத் தொட்டவர்களின் அனுபவங்களைத் தெரிந்து கொண்டு அதில் நல்ல விஷயங்களை பின்பற்றுங்கள்.
அஸ்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும் என்பது கட்டடத்துக்கு மட்டுமல்ல. எந்த துறையை நீங்கள் தேர்ந்தெடுத்தாலும அந்த துறையில் அஸ்திவாரத்தை உறுதியாக அமையுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் உறுதியாக இருக்க வேண்டும்.
கடினமாக உழைக்க வேண்டும் என்றால் 24 மணி நேரமும் உழைக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. உங்கள் குடும்பத்துக்காகவும் நேரத்தைச் செலவிடுங்கள். இல்லையெனில் பணியில் சோர்வு ஏற்பட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்
For more info : vsudhir27@hotmail.com
Report Abuse