News - எல்கேஜி, யுகேஜி-க்கு விரும்பிய
பி.இ. படிப்புக்குக் கூட பிடித்த கல்லூரியில் இடம் கிடைத்துவிடுகிறது. ஆனால், எல்கேஜி, யுகேஜி-க்கு விரும்பிய பள்ளிகளில் இடம் கிடைப்பதில்லை. நள்ளிரவு முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றோர் விண்ணப்பம் வாங்கும் நிலையும் இங்குதான் அரங்கேறுகிறது.
நம்மை விட முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து இன்னும் பிற நாடுகளில் கூட முன்பருவப் பள்ளி (எல்கேஜி, யுகேஜி) கிடையாது; அங்கு 6 வயதில் தான் மாணவர்களைப் பள்ளியில் சேர்க்கின்றனர் என்பது கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம்.
?வளர்ச்சியடைந்த நாடுகளில் 95 சதவீத பள்ளிகள் அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளன. முன்பருவப் பள்ளி படிப்புக்கே இவ்வளவு கிராக்கி இருப்பது தமிழகத்தில் மட்டும்தான் ?விரும்பிய பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு இடம் கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
பள்ளி மாணவர் சேர்க்கை என்றாலே கட்டணத்தில் தொடங்கி, விரும்பிய பள்ளி கிடைக்குமா என பெற்றோரின் மனதில் ஏற்படும் கவலைக்கு அளவே இல்லை..
10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், குறைந்த மதிப்பெண் பெறும்பட்சத்தில் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு இடம் கிடைப்பதில்லை என்ற ஒரு புகார் பரவலாக உள்ளது. தனியார் பள்ளிகளில் இந்த நிலைமை தீவிரமாக உள்ளதாக கூறுகின்றனர்.
சில பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைக் காண்பிக்கும் நோக்கில் தான் மாணவர்களை சேர்ப்பதில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:
தனியார் பள்ளிகள் அதே பள்ளியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்த மாணவருக்கு, 11-ம் வகுப்பில் விரும்பிய பாடத்தில் சேருவதற்கு அனுமதி அளிப்பதில்லை.
இதுதொடர்பான ஒரு வழக்கில், அதே பள்ளியில் படித்த மாணவர், மதிப்பெண் குறைவாகப் பெற்றிருந்தாலும், அந்த மாணவருக்கு முக்கியத்துவம் கொடுத்த பிறகுதான் பிற பள்ளிகளைச் சேர்ந்த மாணவருக்கு அனுமதி தர வேண்டும் என்று அண்மையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது கவனிக்கத்தக்க விஷயமாகும்.
அதேபள்ளியில் படித்த மாணவருக்கு, அனுமதி மறுக்கும்பட்சத்தில் அவர் எப்படி வேறு பள்ளியில் சேர முடியும்? இது எந்த வகையில் நியாயம்?
10-ம் வகுப்பில் மாணவர் மதிப்பெண் குறைவாகப் பெற அந்தப் பள்ளியும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
?பிரபல தனியார் பள்ளிகள் 94 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவரை, பிளஸ் 1-ல் சேர்க்கின்றன. அந்த மாணவர் பிளஸ் 2-வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகிறார். இப்படி மாணவர்களை வடிகட்டி சேர்க்கும் இப்பள்ளிகளின் போக்கு முற்றிலும் வணிக நோக்கம் கொண்டதுதான். தங்கள் பள்ளிகளின் ரேங்க்கை அப்படியே தக்க வைப்பதே அவர்களின் நோக்கமாகும். உண்மையான பள்ளிகள் மாணவர்களை தரம் பிரித்து சேர்க்கை நடத்தக் கூடாது.
10-ம் வகுப்பு வரை பொதுவான பாடத்தைப் படிக்கின்றனர். அறிவியல் படிக்கலாம் என்று பிளஸ் 1 சேரும் போது, அவர் சிறப்பாகப் படிக்கக்கூடும். மேலும் விருப்பம் இல்லாத பாடத்தைத் திணிக்கும்போது, மாணவர் பின்னோக்கி செல்லவே வாய்ப்புண்டு.
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட 1,050 முதல் 1100-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர்.
100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில் ஒரு சில அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கூட பிளஸ் 1-ல் மாணவர் சேர்க்கையில் வடிகட்டும் போக்கை கடைப்படிக்கின்றன என்றார்.
For more info : vsudhir27@hotmail.com
Report Abuse